ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
வாவ்.. ஹீரோயின்களையே மிஞ்சும் பேரழகு! வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் விஸ்வாசம் அஜித் மகள்!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி வளர்ந்து வரும் நட்சத்திரமாக பிரபலமாக இருப்பவர் நடிகை அனிகா சுரேந்திரன். தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இவர் அதனை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் அவர் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். நடிகை அனிகா மலையாள மொழியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பார். இந்நிலையில் அவர் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாயடைக்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.