செட்டே ஆகாது.. அந்த விஷயத்தில் நயன்தாரா இப்படிதான்.! விஸ்வாசம் அனிகா ஓபன் டாக்.! ஷாக்கான ரசிகர்கள்!!anika-surendar-talk-about-nayanthara

தமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர் தொடர்ந்து மிருதன், நானும் ரவுடிதான் போன்ற படங்களில் நடித்தார். மீண்டும் அவர் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக விஸ்வாசம் படத்தில் அசத்தலாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவரைக் குட்டி நயன் என அழைத்து வருகின்றனர் இந்த நிலையில் 18 வயது நிறைந்த அனிகா தற்போது தெலுங்கில் புட்டபொம்மா என்ற படத்திலும், மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். மேலும் அவர் ஓ மை டார்லிங் படத்தில் லிப் லாக், படுக்கையறை காட்சிகளில் அசால்டாக நடித்துள்ளார்.

Anika

இந்த நிலையில் அப்படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனிகா நயன்தாரா குறித்து சில விஷயத்தை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர், நயன்தாரா மிகவும் இனிமையானவர். எப்பொழுதும் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். மேலும் எல்லா விஷயத்திலும் மிகவும் பர்ஃபெக்ட்டாக இருப்பார். ஆனால் மேக்கப் போட மட்டும் மிகவும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வார் எனக் கூறியுள்ளார்.