அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்..! கதாநாயகியாக களமிறங்கும் அஜித்தின் ரீல் மகள்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்..! கதாநாயகியாக களமிறங்கும் அஜித்தின் ரீல் மகள்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!


Anika surendar talk about her heroine experience


தமிழில் விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் அனிகா சுரேந்திரன்.சிறு வயதில் இருந்தே நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகர்களான அஜித், மம்மூட்டி, மோகன்தாஸ் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடையே மிக அதிக வரவேற்பு பெற்றுள்ளார்.

அவர் தற்போது மலையாளத்தில் வெளியான "கப்பெலா" படத்தின் தெலுங்கு  ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு புட்டபொம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அனிகா பேட்டி ஒன்றில், நான் குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனதிலும் இடம்பிடித்துவிட்டேன். தற்போது ஹீரோயினாகி உள்ளேன்.

Anika
 நான் பல முன்னணி நடிகர்- நடிகைகளின் படங்களில் பணியாற்றியதால் அவர்களிடமிருந்து நிறைய நல்ல விஷயங்ககளை கற்றுகொண்டு எனது திறமையை மேம்படுத்திக் கொண்டேன். எனக்கு உணர்வுப்பூர்வமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை. மேலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் ஒன்றி நடிப்பேன் என கூறியுள்ளார்.