சினிமா

அவர்தான் ஹீரோனு சொல்லி ஏமாத்திட்டாங்க! பிரபல நடிகரை தொடர்ந்து ஆண்ட்ரியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Summary:

Andrea said about fraud director

தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அதனை  தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பெயரை கூறியும், என்னோடு நடிக்க வைப்பதாக கூறியும் சில மோசடி தயாரிப்பு நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. அவர்களிடம்  எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா அளித்த பேட்டி ஒன்றில்,  பெண்கள் என்றாலே ஏமாந்து போகிறவர்கள் என சிலர் நினைக்கிறார்கள். தயாரிப்பாளர் என கூறிக் கொண்டு நபர் ஒருவர் என்னை சந்தித்தார். அவர் வெப்சீரிஸ் ஒன்று தயாரிக்கவிருப்பதாகவும், அதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நீங்கள் நடிக்க வேண்டுமெனவும் கூறினார்.  உடனே நான் கதை கேட்க வேண்டும் என கூறவும், அவர் அதற்கு இயக்குனரை அனுப்பிவைப்பதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அது எல்லாம் பொய். ஏமாற்றி விட்டனர் என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

 


Advertisement