சினிமா

சற்றும் எதிர்பாராமல் நடந்த சம்பவம், மேடையில் கதறி அழுத்த விஜய் டிவி பிரபலம் டிடி!

Summary:

Anchor dd cried at tv show

சின்னத்திரை, வெள்ளி திரை என 20 வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிறார் தொகுப்பாளினி டிடி. இவருடைய கலகலப்பான பேச்சு, டிவி முன் அமரும் அனைவரையும் கவர்ந்து விடும். இதனால் இவருக்கு பல பிரபலங்கள் கூட ரசிகர்களாக உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வளங்கிளர் டிடி. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பங்கேற்றுள்ளார் டிடி.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் டிடி. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆனது.

  Related image

இந்நிலையில் டிடி தொகுப்பாளராக 20 வருடத்தை நிறைவு செய்ததை ஒட்டி இவருக்கு பலர் பாராட்டுக்கள், மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவித்தனர்.  இந்நிலையில் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார் டிடி. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது.

டிடி அவரது அப்பாவுடன் குடும்பமாக இருப்பது போல் ஒரு ஓவியம் வரைந்து அதை பரிசாக கொடுத்தனர். அந்த புகைப்படத்தை பார்த்ததும் மேடையிலையே இருந்த டிடி  அழ, அங்கு வந்திருந்த அவரது அக்கா, மற்றும் அம்மாகவும் அழுதுவிட்டனர்.


Advertisement