சினிமா

அவரது ஆசை நிறைவேறாமலே இறந்துட்டாரே...வடிவேல் பாலாஜி குறித்து அமுதவாணன் புலம்பல்.!

Summary:

Amuthavanan told about vadivel balaji

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தனது வித்தியாசமான காமெடியின் மூலம் அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் இறப்பு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

வடிவேல் பாலாஜி இறந்த செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி இன்று அவரது உடல் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாலாஜி உயிரிழந்தது குறித்து ஒரு பேட்டியில் அமுதவாணன் பேசும்போது, அவரது மரணம் இன்னும் அதிர்ச்சியாவே இருந்தது. அது இது எது 2ம் சீசன் செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். Mr-Mrs நிகழ்ச்சியில் மனைவியுடன் சேர்ந்து வித்தியாசமாக நடனம் ஆட ஆசையாக இருந்தார்.ஆனால் அது நிறைவேறாமலே அவர் உயிரிழந்துள்ளார் என வருத்தமாக பேசியுள்ளார்.

 


Advertisement