சினிமா

அதற்காக அலட்சியமாக இருக்காதீங்க.. நடிகர் அமிதாப் பச்சன் விடுத்த வேண்டுகோள்! என்னனு பார்த்தீர்களா!!

Summary:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு,  கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் மாஸ்க் போடுவது, சமூக விலகலை பின்பற்றுவது, ஊரடங்கை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளின் அவசியங்களை கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தாங்கள் தடுப்பூசி போடும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நாட்டின் சில பகுதிகளில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், சில பகுதிகளில் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்தநிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தவறாமல் கொரோனா வழிமுறைகளை பின்பற்றுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள், மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement