விவாகரத்து ஆனாலும் மனைவிகளை பிரியாத பிரபல நடிகர்.. அந்த உறவு நன்றாக இருக்கிறது - ஓபன்டாக்..!! 

விவாகரத்து ஆனாலும் மனைவிகளை பிரியாத பிரபல நடிகர்.. அந்த உறவு நன்றாக இருக்கிறது - ஓபன்டாக்..!! 


Amir Khan Says about His Friendship relationship with Ex Wife

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் அமீர்கான். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது இவரது நடிப்பில் "லால் சிங் தாத்தா" என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. 

இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பட பிரமோஷனுக்காக அண்மையில் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கரீனா கபூருடன், அமீர்கான் கலந்துகொண்டார். அப்போது அமீர்கானிடம் அவரது முன்னாள் மனைவி குறித்து கேள்வி எழவே, அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

cinema

அவர் தனது முன்னாள் மனைவிகள் கிரண் மற்றும் ரீனாவை வாரம் ஒரு முறையாவது சந்தித்துவிடுவாராம். அத்துடன் இவருக்கு இருவருடனான நட்பும் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், விவாகரத்து ஆனாலும் அனைவரும் ஒரேகுடும்பம் தான் என்று அமீர்கான் கூறியுள்ளார். இந்த பதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

cinema

இதனை தொடர்ந்து அமீருக்கு கடந்த 1986ஆம் ஆண்டு ரீனா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 2002 ஆம் ஆண்டு விவாகரத்தானது.அதன் பின் 2005 ஆம் ஆண்டு கிரண் என்பவரை அமீர் திருமணம் செய்தார். ஆனால் அவரையும் கடந்த 2021 ஆம் ஆண்டு அமீர் விவாகரத்துசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.