திரிஷா செய்த செயலால் இயக்குனர் அமீரின் ரசிகர்கள் கொந்தளிப்பு.. வைரலாகும் பதிவு.!amir-fans-angry-about-trisha-recent-video

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா. இவர் ஆரம்ப கால விளம்பர படங்களிலும், மாடல் அழகியாகவும் இருந்து வந்தார். தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

trisha

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் த்ரிஷா. சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்து வந்தன.

இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

trisha

இது போன்ற நிலையில் சமீபத்தில் இயக்குனர் அமீர் இயக்கிய 'மௌனம் பேசியதே' திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் நிறைவடைந்தது. இதற்கு இப்படத்தில் நடித்த சூர்யா, த்ரிஷா, லைலா போன்ற பலருக்கும் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து த்ரிஷாவும் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் பலருக்கும் நன்றி கூறிய த்ரிஷா இயக்குனர் அமீரை மறந்துவிட்டார் என்று நெட்டிசன்கள் மற்றும் அமீரின் ரசிகர்கள் இவரை திட்டி கமண்ட் செய்து வருகின்றனர்.