சினிமா

விசுவாசம் படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு விலை கொடுத்து வாங்கியுள்ள பிரபல நிறுவனம்!

Summary:

Amazon prime bought visuvasam digital rights

சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் தல அஜித். வீரம், வேதாளம் படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது. விவேகம் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்நிலையில் நான்காவதாக விசுவாசம் படத்தில் மீண்டும் இணைத்துள்ளது சிவா - அஜித் கூட்டணி.

படத்தின் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ட்ரைலர் வரும் புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அன்றைய தினம் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட திரைப்படம் வெளிவர இருப்பதால்  தலைவரா - தலையா என இருதரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விசுவாசம் படத்திற்கான டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனமான Amazon Prime வாங்கியுள்ளது. இதன் மூலம் Amazon Prime வாடிக்கையாளர்கள் விசுவாசம் படத்தினை வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம். ஆனால் படம் திரையரங்கில் வெளியாகி , சில நாட்கள் கழித்துதான் Amazon Prime இல் ஒளிபரப்பாகும்.

இதில் விஷயம் என்வென்றால் விசுவாசம் படத்தை Amazon நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம். இதுவரை தமிழ் படங்கள் எதுக்கும் கொடுக்காத அதிக விலை விசுவாசம் படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். தலனா சும்மாவா! சும்மா தெறிக்க விடுவோம்ல!


Advertisement