காதலனை 2-வதாக திருமணம் செய்த கையோடு வளைகாப்பில் பங்கேற்ற அமலாபால்.!amalapaul-in-her-friend-baby-shower-function

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் அமலாபால். இவர் சமீப காலமாக எந்தவித திரைப்படங்களிலும் நடிக்காமல், ஒரு சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒருபுறம் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், இன்னொரு புறம் இணையதள தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amalapaul

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தளபதி விஜயுடன் தலைவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த திரைப்படத்தின் இயக்குனரான  ஏ.எல்.விஜய் அவர்களோடு காதல் ஏற்பட்டதால், பின்னாளில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு சில வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சட்டப்படி இருவரும் பிரிந்தனர்.

Amalapaul

இந்த சூழ்நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமலாபால் தன்னுடைய காதலனை கரம்பிடித்டிருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அமலாபால் வெளியீட்டு வருகிறார்.