சினிமா

அமலாபால் வாழ்க்கையில் இவ்வளவு விரக்தியா! ஒரு ட்வீட்டில் எத்தனை அர்த்தங்கள்

Summary:

Amalapaul about life

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்தார் அமலாபால். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.

தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் AL விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கினர் அமலா பால். இந்நிலையில் 27 வயதாகும் அமலா பால் இப்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்ற சில செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நடிகை அமலா பால் ‘நானாக முடிவெடுத்த எனது முதல் திருமணம் சரியாக அமையவில்லை. ஆகையால், எனது இரண்டாவது திருமணம் பற்றி முடிவெடுப்பதை எனது தாய் தந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டேன்' என கூறியிருந்தார். 

இந்நிலையில் அமலாபாலுக்கு இப்போது துணையாக இருப்பது அவரது செல்லப் பிராணியான வின்டர் தான். சுயநலமான இந்த உலகில், சுயநலமின்றி வாழ்வது எப்படி என்பதனை ஒரு செல்லப் பிராணி மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வசனத்துடன் அமலாபால் தனது செல்லப்பிராணியுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


Advertisement