வாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா! கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ!

வாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா! கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ!


Alya sanjeev daughter cute video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இந்த தொடரில் கணவன், மனைவியாக நடிக்க வந்த இருவருக்கும் நிஜத்தில் காதல் மலர்ந்து பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அழகிய ஜோடியாக வலம் வந்த இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அவர்கள் ஐலா என பெயரிட்டுள்ளனர்.

மேலும் சஞ்சீவ் தற்போது காற்றின் மொழி தொடரிலும், ஆலியா  ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது தனது மகளின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் செம கியூட் என கொஞ்சி  வருகின்றனர்