சூட்டிங் ஸ்பாட்டில் தெரு நாய்க்கு கையில் வைத்து பிஸ்கட் ஊட்டிய பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ

சூட்டிங் ஸ்பாட்டில் தெரு நாய்க்கு கையில் வைத்து பிஸ்கட் ஊட்டிய பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ


Aksay kumar feeds bisuit to street dog

பாலிவுட் திரைத்துறையின் முன்னனி நடிகர்களில் ஒருவர் அக்சய் குமார். இவர் தமிழில் சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். 

51 வயதாகும் அக்சய் குமார் ஹிந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நகைச்சுவை, காதல், ஆக்சன் என அனைத்து விதமான படங்களிலிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் அக்சய் குமார். 

Akshaikumar

பஞ்சாபின் அமிர்தசரில் பிறந்த அக்சய் குமாருக்கு கலைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசாங்கம் அவருக்கு 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது. 

இவரது நடிப்பில் தற்போது சூர்யவன்சி எனற் ஹிந்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் பட்ததின் படபிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்று இந்த படத்தின் படப்பிடிப்பின் உணவு இடைவேளையில் அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய் ஒன்று அங்கு வந்ததை கண்டுள்ளார் அக்சய். 

Akshaikumar

அந்த நாய் பசியுடன் இருப்பதை உணரந்துகொண்ட அக்சய் தன்னிடம் இருந்த முழு பிஸ்கட் பாக்கெட்டையும் பிரித்து நாய்க்கு கொடுத்துள்ளார். அதை தரையிலோ அல்லது தட்டிலோ போடாமல் தன் கையிலே வைத்துக்கொண்டு நாய்க்கு கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அக்சய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.