கார்த்தியை கழட்டி விட்ட லிங்குசாமி? பையா 2ல் படத்தில் இவர் தான் ஹீரோ.!Akash murali in paiya 2 movie

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எளிதான கதை என்றாலும், லிங்குசாமியின் திரைக்கதை இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக உள்ளது.

Akash Murali

இந்த நிலையில் பையா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் கார்த்திக்கு பதிலாக ஆர்யா நடிப்பார் என கூறப்பட்டது. இதனிடையே இரண்டாம் பாகத்தின் கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் அதனால் அவரே நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

Akash Murali

இந்த நிலையில் பையா 2 திரைப்படத்தில் கார்த்தி மற்றும் ஆர்யா இருவருமே நடிக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக பிரபல நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்கான வேலைகளை லிங்குசாமி தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.