சினிமா

தல அஜித் மகன் செய்யும் குறும்பு, அதை சமாளிக்கும் ஷாலினி!! வைரலாகும் வீடியோ!!

Summary:

ajith son in shoping centre


தமிழ் சினிமாவில் சற்று வித்தியாசமானவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இந்த உயரத்திற்கு வளர்ந்துள்ளார் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித்துக்கு ரசிகர் மன்றமே கிடையாது.

அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில் தற்போது அஜித் மகன் ஆத்விக், அம்மா ஷாலினியுடன் ஷாப்பிங் செண்டரில் இருப்பது போல வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு காரை எடுத்து ரொம்ப நேரமாக பார்க்கிறார் ஆத்விக்,  ஆனால் ஷாலினி ஆத்விக்கிடம் செல்லமாக பேசி அழைத்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement