மேடையில் அட்டகாசமாக அஜித் மகள் பாடிய பாடல்! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ !

மேடையில் அட்டகாசமாக அஜித் மகள் பாடிய பாடல்! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ !



ajith-sing-in-school-function

தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கென மாபெரும் நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். அவருடன் சேர்ந்து நடிக்கவும் பல நடிகைகளும் தவமாய் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு அஜித் நடித்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரு  படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவர் மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத்துடன் இணைந்து வலிமை என்ற படத்தில் நடிக்கஉள்ளார். மேலும் அவர் அதற்காக தனது கெட்டப்பையும் மாற்றியுள்ளார். இதில் அஜித் போலீசாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

anoushka

நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி. அவர்களுக்கு ஆத்விக், அனோஷ்கா என இருகுழந்தைகள் உள்ளனர். மேலும் அஜித் செய்யும் ஒவ்வொன்றையும் ட்ரெண்டாக்கி வரும் தல ரசிகர்கள் அவரது குழந்தைகள் செய்யும் அனைத்தையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அனோஷ்கா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அனோஷ்கா பாட்டு பாடியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.