ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
நான்கு படங்களில் இந்த படம் தான்? விசுவாசம் படம் பார்த்து விட்டு அஜித் கூறியது!
இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் அஜித். வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இந்த கூட்டணி தற்போது விசுவாசம் என்ற நான்காவது படத்தையும் கொடுத்துள்ளது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
வரும் பொங்கலை முன்னிட்டு, விசுவாசம் படம் நாளை அதாவது ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வர இருப்பதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையேல் விசுவாசம் படத்தின் பிரிவியூ ஷோ பாத்து விட்டு சிவா இயக்கத்தில், தான் நடித்த நான்கு படங்களில் விசுவாசம் படம்தான் மிகவும் பிடித்துள்ளதாக, அனைவர் முன்னிலையிலும் அஜித் சத்தமாக கூறினார். அது தனக்கு மிகவும் பெருமையாக உள்ளதாக இயக்குனர் சிவா கூறியுள்ளார்.
மேலும் விசுவாசம் படம் பேட்ட படத்திற்கு போட்டியெல்லாம் கிடையாது. இரண்டு படங்களும் வெற்றிபெற வேண்டும். நான் அதைத்தான் விரும்புகிறேன், அஜித்தும் அதைத்தான் விரும்புவார் என சிவா கூறியுள்ளார்.