சினிமா

விசுவாசம்: இரவோடு இரவாக பேக்கப்! நடிகர் அஜித்தை கெஞ்சும் தயாரிப்பாளர். இதான் காரணமா?

Summary:

Ajith new movie visuvaasam shooting over and releasing on coming pongal

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்புகள் நேற்று நள்ளிரவு முடிவடைந்தது. இத்தகவலை படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியும், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனும் சற்றுமுன்னர் ட்விட்டரில் வெளியீட்டுள்னர்.

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகை அஜித். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடனக்கலைஞர் சரவணன் எதிர்பாராமல் இறந்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பு மூன்று நாட்கள் தடைபட்டது. பின்னர் 9ம் தேதி துவங்கிய படப்பிடிப்பு நேற்று நள்ளிரவு 3 மணிக்கு நிறைவுபெற்றதை ஒட்டி இன்று காலை அஜீத் சென்னை திரும்பினார். 

இந்நிலையில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிப்பில்  பொங்கலுக்கு பேட்ட’ படம் ரிலீஸானாலும் ‘விஸ்வாஸம்’ படத்தை தள்ளிப்போடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறதாம் படக்குழு. உடன் ரஜினி படம் வருவதால் வழக்கம் போல் ஒதுங்கி நிற்காமல் இம்முறை பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று அஜீத்தைக் கெஞ்சிக்கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.


Advertisement