நடுரோட்டில் பைக்கில் ஏற்பட்ட பிரச்சினை! தவித்து நின்ற வாலிபருக்காக நடிகர் அஜித் செய்த காரியம்!! நெகிழ்ச்சி சம்பவம்!!ajith-help-to-the-persion-who-struggling-with-bike-prob

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித் பைக் ரேஸர். அவர் தற்போது இமயமலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு  பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு கூட அஜித் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அஜித் குறித்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், தான் முதன் முறையாக பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் ஆனால் நடுரோட்டில் பைக் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டதாக கூறியுள்ளார்.

Ajith

மேலும் தனக்கு யாருமே உதவி செய்ய மாட்டார்கள் என எண்ணி நின்றபோது எதார்த்தமாக அவரை கடந்து சென்ற பைக்கை கையைக் காட்டி உதவி கேட்டுள்ளார். அந்த பைக்கில் வந்த நடிகர் அஜித் அந்த நபரிடம் பைக்கில் என்ன பிரச்சினை என விசாரித்து பின்னால் வந்த காரில் இருந்த சில டூல்ஸை பயன்படுத்தி அந்த பைக்கை சரி செய்துள்ளார். தொடர்ந்து அவர் தான் அஜித் என அந்த நபரிடம் அறிமுகம் செய்து கொண்டாராம்.

அதுமட்டுமின்றி அந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் டீ அருந்தியுள்ளார். இந்த தகவலை அந்த நபர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படங்களுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.