சினிமா

விஜய்யின் மாஸ்டர் படம் வெற்றிபெற அஜித் ரசிகர்கள் செய்துள்ள காரியத்தை பாருங்கள்.! வைரல் புகைப்படம்.!

Summary:

Ajith fans viral poster for vijaiys master movie success

தமிழ் சினிமாவின் இருபெரும் துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்ப்பதும், அஜித் படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில், நண்பர் அஜித் போல கோட்டு ஷூட்டு அணிந்து வந்திருப்பதாக விஜய் பேசியது விஜய் - அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அன்றில் இருந்து அஜித் ரசிகர்கள் விஜய்யை புகழ்ந்துவருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் மாஸ்டர் படம் வெற்றிபெறவேண்டி, அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் விஜயை போன்று அவரது ரசிகர்களும் போட்டியாளரை நண்பனாக கருதினால் அழகாய் இருக்கும் என்ற வசனமும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement