சினிமா

சர்க்கார் விவகாரம்: ஓன்று சேர்ந்த தல, தளபதி ரசிகர்கள்! வீடியோ உள்ளே!

Summary:

Ajith fans support thalapathi sarkar

சர்க்கார். இன்று தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கேட்கும் வார்த்தை சர்க்கார். தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். படத்தின் போஸ்டர் வெளியானதுமுதல் இன்றுவரை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது சர்க்கார் திரைப்படம்.

படம் முழுவதும் அரசியல் என்பதாலும், ஆளும் கட்சிக்கு எதிரான காட்சிகள் அதிகம் இருந்ததாலும் படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. சென்னை காசி தியேட்டர் உள்ளே நுழைந்த சிலபேர் அங்கிருந்த சர்க்கார் பேனர்களை கிழித்தனர். இதனால் சர்ச்சைக்குரிய ஒருசில காட்சிகளை நீக்க பட தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டது. இந்நிலையில் சர்க்காருக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் பலரும் வீடியோவாகவும், மீம்ஸ்களாகவும் வெளியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் விஜய், அஜித் ரசிகர்கள் என்றாலே அடித்துகொள்ளவர்கள், மோதி கொள்வார்கள் என்ற நிலை விலகி சர்க்கார் படத்திற்கு ஆதரவாக அஜித் ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக. 


Advertisement