ரசிகர் எடுத்த வீடியோவில் அஜித் அழுதது ஏன்.? காரணம் தெரியாமல் ரசிகர்கள் தவிப்பு.!

ரசிகர் எடுத்த வீடியோவில் அஜித் அழுதது ஏன்.? காரணம் தெரியாமல் ரசிகர்கள் தவிப்பு.!


Ajith fans meet video viral

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் 'அல்டிமேட் ஸ்டார் அஜித்' எனவும் 'தல' எனவும் கொண்டாடும் விதத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Ajith

இதன்படியே சமீபத்தில் வெளியான 'துணிவு' திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து அஜித்தின் 63வது படத்திற்கு 'விடாமுயற்சி' எனும் பெயரிட்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அஜித் இந்தியாவில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கிருந்து ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த சுற்றுலா முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என படகுழு தெரிவித்து இருக்கிறது.

Ajith

இவ்வாறாக சமீபத்தில் ரசிகர் ஒருவர் அஜித்துடன் வீடியோ எடுத்துக்கொண்டார். அந்த வீடியோவில் ஏன் என்று தெரியவில்லை அஜித் கண்கலங்கி இருக்கிறார். அஜித் கண் கலங்கிய நிலையில் இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி அஜித் ரசிகர்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.