சினிமா

விடிய விடிய காத்திருந்த தல ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்...!

Summary:

ajith-fans-are-disappointed

தற்போது தமிழ் சினிமாவில் இளையதளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவருக்கும் தனி தனியே ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ரசிகர்கள் அனைவருமே, யார் படம் நடித்தாலும் இல்லையென்றாலும் இவர்கள் படத்தை எதிர்பார்த்து கொண்டு தான் இருப்பார்கள்..

தல அஜித் தற்போது இயக்குனர் சிவா அவரின் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த படத்தின் பெயர் விசுவாசம் என்று பெயரிடப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படம் ஷூட்டிங் இன்னும் நிறைவு பெறாத நிலையில் வருகிற பொங்கல் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளியிட இருக்கின்றனர்...

இந்த படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் உள்ள கிராமங்களில் எடுத்து வருகின்றனர்.. இதனால் அஜித் ரசிகர்கள் அனைவர்க்கும் தல அஜித் அவர்கள் தங்களது கிராமத்திற்கு வருவாரா என்று ஏங்குகின்றனர்...

இந்த நிலையில் நடிகர் அஜித் தனது படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு கேரளாவில் இருந்து வேலூர் வழியாக வருகிறார் என்ற செய்தி நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் அங்கே உள்ள டோல்கேட் அருகே விடிய விடிய காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் தல அஜித் அந்த வழியில் வராமல் வேற வழியில் சென்றதாக தகவல் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினார்கள்...


Advertisement