சினிமா

விஸ்வாசம் பார்த்துவிட்டு கண்ணீருடன் வெளியேறும் தல ரசிகர்கள்! காரணம் என்ன?

Summary:

ajith fans about viswaasam

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து 4-வது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார் சிவா. 

அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களுடன் நிறைந்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் இது என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், சுமைகளை அவர்கள் மேல் சுமத்தாமல் எப்படி காக்க வேண்டும் என இயக்குனர் தெளிவாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ரசிகர்களை கண் கலங்க வைக்கும் அளவிற்கு அஜித் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாகவும், இரண்டாம் பாதி பார்ப்போர் மனதை உருக்கும் வகையிலும், இதுவரை கண்ணீர் வராதவர்களுக்கு கூட கண்ணீர் வருவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித்தின் மகளாக நடித்திருக்கும் குழந்தை மிகவும் பிரமாதமாக நடித்திருப்பதாகவும், தந்தை மகள் உறவு திரையில் பட்டையை கிளப்புவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் அஜித் வழக்கம் போல மிரட்டல் விடுத்துள்ளாராம். 


Advertisement--!>