சினிமா

தனது மகள் நடிக்கும் அழகை ஓரமாக நின்று ரசித்து பார்த்த தல அஜித்! ரசிகர்களை வியக்க வைத்த அரிய வீடியோ!

Summary:

நடிகர் அஜித் தனது மகள் மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா  ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தல அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அவருக்கு நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் அஜித் சினிமாவைப் போலவே, தனது குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடியவர். அவர்களுடன் அதிகளவு நேரத்தை செலவிடுவார். இந்த நிலையில் அஜித் தனது மகள் மேடையில் நடிக்கும்போது ஓரமாக நின்று ரசித்த வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தேடி பிடித்து அவரது மகள் அனோஷ்காவின் பிறந்த நாளான நேற்று வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.


Advertisement