சினிமா

வக்கீலைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் வேடத்தில் தல அஜித்! அடுத்த படம் குறித்து கசிந்த தகவல்

Summary:

Ajith again to be casted as police officer

தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள மாஸ் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அஜித் சாதாரண தோற்றத்தில் திரையில் தோன்றினாலே ரசிகர்களின் ஆராவாரம் திரையரங்குகளில் காதை கிளிக்கும். 

இந்நிலையில் அஜித் கம்பீரமான போலிஸ் வேட்த்தில் தோன்றி ஆக்சன் கதையில் நடித்தால் சொல்லவே தேவையில்லை. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உறைந்துவிடுவர். இதற்கு உதாரணம் அவரது மங்காத்தா படம். என்னை அறிந்தால் படத்திலும் அஜித்தின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

சென்டிமெண்ட் நிறைந்த பாசத்திற்கு ஏங்கும் சாதாரண கிராமத்து அப்பாவாக விஸ்வாசம் படத்தில் நடித்த அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தினார். விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் வக்கீலாக அஜித் நடித்து வருகிறார். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப படத்தினை இயக்குநர் ஹச். வினோத் இயக்குகிறார். பெண்களுக்கு ஆதரவாக வக்கீழாக வாதாடும் அஜித்தின் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க ஆள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தினையும் போனி கபூரே தயாரிக்க உள்ளாராம். 

இந்தப் படம் ஆக்சன் படமாக இருக்கும் என்றும் இதற்காக அஜித் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டுவர தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது அஜித் இந்த புதிய படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Advertisement