தல அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் - கசிந்த ரகசியங்கள்
தல அஜித் நடித்து வரும் விசுவாசம் பட வெளியிட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவுபெற்ற நிலையில் தலையின் அடுத்த படங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தல அஜித் இயக்குனர் சிவாவுடன் இயக்கத்தில் நான்கு படங்கள் நடித்ததால் தல ரசிகர்களே சற்று மனவருத்ததில் இருந்தனர். அவர்களை சந்தோசபட வைக்க அடுத்து தல வேறொருவரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
![]()
சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் தல நடிக்க போகிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி ஆனார்கள்.
ஆனால் அந்த படத்திற்கு முன்னதாக, அமிதாபச்சன் நடிப்பில் 2016இல் வெளியாகி பாலிவுட்டில் வெற்றி பெற்ற திரைபடத்தின் தமிழ் ரீமேக்கை முடித்துவிட்டு, அடுத்த படத்தில் வினோத்தின் சொந்த கதையில் நடிப்பதாக ஒப்புகொண்டுள்ளாராம் தல அஜித்.