"அந்த விஷயத்தை நினைச்சாலே இப்பவும் பயமாக இருக்கும்" ஐஸ்வர்யா ராஜேஷின் வைரலாகும் பேச்சு..Aiswarya rajesh openup about her fear

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

aiswarya

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான நடிகையாகவே இருந்து வருகிறார்.

aiswarya

இது போன்ற நிலையில் சமீபத்தில் பெண்களுக்கான காஸ்மெட்டிக் மருத்துவ சிகிச்சைக்கான விழா ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் அழகு கலைகளை பற்றி பேசிவிட்டு பின்னர் சிறு வயதில் இருந்தே எனக்கு ஊசி என்றால் பயம் இப்பொழுதும் அதை நினைத்தாலே நடுங்கும் என்று காமெடியாக பேசியது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது.