BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணம் எப்போது.? பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பர்ஹானா' திரைப்படம் பல எதிர்ப்புகளுக்குபின் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இப்போது ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரைக்கு வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் 'தீரா காதல்' இப்படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'தீராக்காதல்' திரைப்படம் புரமோஷன் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணத்தை குறித்து பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது, "திருமணம் என்பது நிறைய பேருக்கு காமெடியாக விட்டது. ஒரு சில விஷயங்களுக்காக மட்டும் திருமணம் செய்து கொள்வது என்பது தவறான முடிவாகும். வாழ்க்கையில் கடைசி வரைக்கும் ஒன்றாக இருக்கும் நபர்களுக்கு இடையில் புரிதல் இருக்க வேண்டும். சின்ன சண்டைகள் வந்தாலே பிரிந்து விடுவது தவறானதாகும் என்று திருமணம் குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.