"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ஐஸ்வர்யா ராஜேஷின் அனல் பறக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் தற்போது திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியுள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
முதன் முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ், தனது நடிப்பு திறமையின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அட்டகத்தி, உயர்திரு 420 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான படங்களான ரம்மி, காக்கா முட்டை, வடசென்னை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், பண்ணையாரும் பத்மினியும், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்து தமிழ் சினிமா வட்டாரத்தில் பெயர் பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்து வரும் திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருகின்றன. இதனால் இவர் நடிப்பில் அடுத்து வெளியாக போகும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக வருகிறது.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது புத்தாண்டை முன்னிட்டு கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.