"ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய போகின்றனரா.? பரபரப்பு செய்தி.!Aiswarya rai going to divorce her husband

1994ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இதையடுத்து 1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "இருவர்" திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

aishwarya

மேலும் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கில மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து 2011ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி 16ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா - அபிஷேக் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகி, இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் சர்ச்சைகளைத் தூண்டும் பதிவுகளை பகிர்ந்துவருபவர் உமர் சந்த்.

aishwarya

அபிஷேக் பச்சன் கையில் மோதிரம் இல்லை. எனவே விவாகரத்தாகி விட்டது என்று கூறியுள்ளார். ஆனால் சமீபத்தில் ஒரு விழாவில் தன் மகளுடன் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் அங்கு நடனம் ஆடியுள்ளார். அதனால் இந்த செய்தி உண்மையில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.