ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர்.. லைவில் செருப்பால் அடிப்பேன் என்று மிரட்டிய ஐஸ்வர்யா..

ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர்.. லைவில் செருப்பால் அடிப்பேன் என்று மிரட்டிய ஐஸ்வர்யா..


Aiswarya controversy speech at live

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான நடிகை ஐஸ்வர்யா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமடைந்தவர். 80-90 காலக்கட்டங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார் ஐஸ்வர்யா.

aiswarya

ஒருகட்டத்தில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அக்கா மற்றும் அம்மா என்று குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து 1994ம் ஆண்டு ஒரு முன்னணி பிரபலத்தை திருமணம் செய்து கொண்டு, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார்.

அதன் பின்னர் போதைக்கு அடிமையாகி அதிலிருந்து தற்போது மீண்டு, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வரும் ஐஸ்வர்யா , சோப்பு ஆர்டர் எடுப்பதற்காக சமூக வலைத்தளத்தில் எனது வாட்ஸாப் எண்ணை பகிர்ந்துள்ளேன்.

aiswarya

அதை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். 'இரவு 10மணிக்கு மேல் மெசஜ் அனுப்பி பர்சனலா உங்க வீட்டுக்கு வந்து சோப்பு பார்க்கணும். வயசானாலும் கும்முனு இருக்க' என்று மேலும் சொல்லத்தகாத வார்த்தைகள் கொண்டு மெசேஜ் அனுப்பி வருகின்றனர்" என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.மேலும் அந்த நபர்களை செருப்பால் கூட அடிக்கலாம் என்று திட்டியதற்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.