சினிமா

முன்னணி பிரபலத்துடன் ஐஸ்வர்யா ரஜினி! வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ!!

Summary:

முன்னணி பிரபலத்துடன் ஐஸ்வர்யா ரஜினி! வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் திருமணமாகி 18  ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர்.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர். மேலும்  ஐஸ்வர்யா டைரக்ஷனில் இறங்கி பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி வெளியிட்டார். உடற்பயிற்சி, யோகா என உடல் பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில்  ஐஸ்வர்யா பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த வியாழன் இதைவிட பொருத்தமான த்ரோபேக் இருக்க முடியாது. உங்களை பார்த்து, உங்களின் பேச்சைக் கேட்டு, உங்களின் ஸ்டுடியோவில்,வீட்டில் நேரத்தை செலவிட்டு வளர்ந்துள்ளேன். உங்கள் முன்னிலையில் இருந்ததற்காக நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள். உங்களை நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


Advertisement