திருமணமாகி வெளிநாடு சென்ற பிரபல தொகுப்பாளினிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அம்பலமான கணவரின் நிலை! வைரலாகும் வீடியோ!

திருமணமாகி வெளிநாடு சென்ற பிரபல தொகுப்பாளினிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அம்பலமான கணவரின் நிலை! வைரலாகும் வீடியோ!


aishwarya-husband-loss-money-from-family

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா. மேலும் இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சன் சூப்பர் குடும்பம், சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசனில் கலந்துகொண்டார். 

இவ்வாறு பன்முகத் திறமை கொண்ட விளங்கிய ஐஸ்வர்யா பார்ப்பதற்கு மிகவும் கொழுகொழுவென இருந்த நிலையில் அவர் பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை குறைத்தார். பின்னர் தனது பெற்றோர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது தனது வாழ்நாளில் நடந்தவற்றை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் திருமணத்திற்குப் பிறகு தனக்கு காத்திருந்த பேரதிர்ச்சி குறித்தும் அவர் விளக்கியுள்ளார். 

    aishwarya
 
அதில் அவர் திருமணத்திற்கு பின்பு நாங்கள் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோ.ம் பின்பு இருவரும் அமெரிக்காவிற்கு சென்றோம். அங்கு சென்றபோதுதான் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் எனது கணவர் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலையில் இருந்தார். மேலும் அவரது சொந்தக்காரர்கள் அவரை ஏமாற்றி பணத்தை அபகரித்தனர். மேலும் அவருடைய வங்கிக் கணக்கில் சுத்தமாக பணமே இல்லை. திவாலான நிலையில் இருந்தது.

 இந்நிலையில் நான் அவரை குறை சொல்வதை விட்டுவிட்டு அவரது கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டுமென நினைத்தேன் இருவரும் கடுமையாக உழைத்து கொஞ்ச நாட்களிலேயே எங்கள் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்தோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சிறுசிறு காரணத்திற்காக தம்பதியினர்கள் பிரியும் சூழலில் தனது கணவருடன் துணையாக நின்று வென்ற ஐஸ்வர்யாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.