அடஅட.. பட்டுச்சேலையில் பளபளக்கும் ஐஸ்வர்யா! சும்மா பாத்துகிட்டே இருக்கலாம் போல.! குவியும் லைக்ஸ்கள்!!

அடஅட.. பட்டுச்சேலையில் பளபளக்கும் ஐஸ்வர்யா! சும்மா பாத்துகிட்டே இருக்கலாம் போல.! குவியும் லைக்ஸ்கள்!!


Aishwarya dutta latest homely photos viral

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இப்படத்தில் அவர் கல்லூரி மாணவியாக, ஹோம்லி லுக்கில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆச்சாரம், ஆறாது சினம் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ஆனால் அப்படங்கள் மூலம் ஐஸ்வர்யா எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.  அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவரது சில எல்லை மீறிய செயல்களால் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். மேலும் அவரை ராட்சச ராணி என அழைத்தனர்.

ஐஸ்வர்யா தத்தா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். இந்த நிலையில் அவர் தற்போது பட்டுச்சேலையில் கொள்ளை கொள்ளும் அழகில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.