சினிமா

மீண்டும் மலர்ந்த ஓவியா, ஆரவ் காதல்!. வெளியாகும் புகைப்படங்கள்!.

Summary:

again started oviya and aarav love

தமிழ் சினிமாவில் களவானி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் நடிகை ஓவியா. 

அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது முத்தமிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தினர். அனால் ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக  ஓவியா மறைமுகமாக தெரிவித்தார். 

         oviya aarav க்கான பட முடிவு

ஆனாலும் ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி, பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றது.

சமீபத்தில் ஆரவ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடியாக நின்று செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement