தளபதி வழியில் அரசியலுக்கு வரும் புரட்சித்தளபதி.? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர் அறிவிப்பு.!

தளபதி வழியில் அரசியலுக்கு வரும் புரட்சித்தளபதி.? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர் அறிவிப்பு.!after-vijay-vishal-may-enter-politics-soon-there-will-b

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பாக "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்திருந்தார். அதே சமயம் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷாலும் அரசியல் கட்சியை தொடங்க தயாராகி வருகிறார். செல்லமே சண்டைக்கோழி போன்ற திரைப்படங்களில் நடிகர் விஷால் நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே அரசியலில் ஆர்வம் உடையவர். அந்த வகையில் சென்னை ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.

cinemaஅதே சமயம் நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கமாக மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். மேலும் படப்பிடிப்புகளுக்கு செல்லும் சமயத்தில் அங்குள்ள கிராம மக்களிடம் குறைகளை கேட்டு அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார்.

cinemaஇந்நிலையில் நடிகர் விஷால் புதிய அரசியல் கட்சி ஒன்றை   தொடங்கி அதற்கான சின்னமும் அறிவிக்கப்படும் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் விஷால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறாரா? அல்லது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறாரா? என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.