சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு OTTயில் வெளியாகவுள்ள தளபதி விஜயின் திரைப்படம்.! எந்த படம் தெரியுமா?

Summary:

After a very long time actre vijay movie release in OTT

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவரின் படங்கள் மற்றும் பிறந்தநாளை தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி பிற மாநில மக்களும் விழா போல கொண்டாடி வருகின்றனர். அந்த அளவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் விஜய்.

இந்நிலையில் தற்போது கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் நேசன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து மெகா ஹிட் அடித்த படம் தான் ஜில்லா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ஜில்லா படத்தின் தெலுங்கு வேர்ஷன் OTT யில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தில் கூடுதலாக பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பரமானந்தம் விஜய்யுடன் நடித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக எந்த ஒரு படமும் திரையில் வெளியாகாமல் போகவே இப்படத்தை OTTயில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 


Advertisement