6 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் டிவிக்கு வந்த பிரபல தொகுப்பாளினி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

6 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் டிவிக்கு வந்த பிரபல தொகுப்பாளினி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!


after-6-vj-bavana-entered-in-vijay-tv

விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளி பாவனா. இவர் சூப்பர் சிங்கர் மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பாவனா தனது தனித்துவமான குரலாலும், உச்சரிப்பு மிகுந்த பேச்சாலும் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். 

மேலும் பாவனா சில காலமாக விஜய் டிவியிலிருந்து விலகி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொகுப்பாளினியாக இருந்து வந்தார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

VJ bavana

இந்நிலையில் தற்போது 6 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களம் இறங்கியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.