சினிமா

45 வருடத்தில் வசூலில் சாதனை படைத்த முதல் படம்! பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்!

Summary:

After 45 years two point o movie collected more money

சென்னையில் உள்ள திரையரங்குகளில் மிகவும் புகழ்பெற்ற ஓன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம். பிரபலங்களின் படங்கள் வெளியாகும்போது வெற்றி திரையரங்கம் விழாக்கோலம் பூண்டிருக்கும். மேலும் சினிமா பிரபலங்களும் தங்களின் படங்களை காண ரசிகர்களுடன் ரசிகர்களாக இந்த திரையரங்கிற்கு வருவது உண்டு.

தற்போது தலையின் விஸ்வாசம் படமும், ரஜினியின் பேட்ட திரைப்படமும் வெற்றி திரையரங்கில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில் கடந்த 45 வருடத்தில் அதிகம் வசூலான திரைப்படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது வெற்றி திரையரங்கம்.

1973-ம் ஆண்டு முதல் தற்போது வரை வெளியான படங்களில் ரஜினிகாந்தின் 2.0 படம் அதிகமாக வசூலித்ததாக திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கௌதமன் கூறியுள்ளார். இந்த வசூல் தொகையில் 3டி கண்ணாடிகளின் வருமானம் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

2.0 படம் தமிழ் சினிமாவில் அதில செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்தது. 


Advertisement