மீண்டும் இணையத்தில் அடிச்சு தூக்கும் விஸ்வாசம்!. ஒரே நாளில் தீயாக டிரெண்டான அடிச்சி தூக்கு!!

மீண்டும் இணையத்தில் அடிச்சு தூக்கும் விஸ்வாசம்!. ஒரே நாளில் தீயாக டிரெண்டான அடிச்சி தூக்கு!!


adichu-thuku-trending


இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விஸ்வாசம் படத்தை வெளியிட்டுள்ளனர். பட்டமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஸ்வாசம் படத்தில் "கண்ணான கண்ணே..கண்ணான கண்ணே...என் மீது சாய வா..." அப்பா, மகள் இடையேயான பாசத்தை எடுத்துக்காட்டும் இந்த பாடல் ஹிட் பாடல்களின் வரிசையில் சேர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலை கேட்கும்போதே அணைத்து கவலையும் நீங்குகிறது என மக்கள் கூறுகின்றனர்.

விஸ்வாசம் படத்தில் வரும் "அடிச்சி தூக்கு" பாடல் படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. நேற்று இந்த பாடலின் வீடியோ வெளியாகி சிறிதி நேரத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டாக தொடங்கியது.