அடேங்கப்பா.. அதர்வா வேற லெவல்.! ஆக்ஷனில் தெறிக்கவிடுறாரே! இணையத்தை மிரட்டும் ட்ரிக்கர் டீசர்!!

அடேங்கப்பா.. அதர்வா வேற லெவல்.! ஆக்ஷனில் தெறிக்கவிடுறாரே! இணையத்தை மிரட்டும் ட்ரிக்கர் டீசர்!!


Adharva Trigger movie teaser released

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அதர்வா இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடித்துள்ள படம் "ட்ரிக்கர்". இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும், சீதா, அருண்பாண்டியன், முனீஷ்காந்த், சின்னிஜெயந்த் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை
பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ட்ரிக்கர் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதில் அதர்வா ஆக்ஷனில் மிரட்டியுள்ளார்.