ஊரடங்கால் பொழுதுபோகவில்லை! நடிகர் ஷாம் செய்த காரியம்! அதிரடியாக கைது செய்த போலீசார்!

ஊரடங்கால் பொழுதுபோகவில்லை! நடிகர் ஷாம் செய்த காரியம்! அதிரடியாக கைது செய்த போலீசார்!


acttor-sham-arrested

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் ஷாம், வீட்டிலேயே சூதாட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியானது. தகவலின் பேரில் அங்கு சென்ற நுங்கம்பாக்கம் போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாம் உள்பட14 பேரை கைது செய்தனர்.

தமிழ் சினிமாவில் 12பி, இயற்கை, பாலா, லேசா லேசா, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம். கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு சென்னையில் பல நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் இயங்க தொடங்கி உள்ளன.

actor sham

ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கு சினிமா பிரபலங்களும், தொழில் அதிபர்களும் ரகசிய குறியீடுகள் கொண்டு பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று இரவு அந்த வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தியுள்ளனர்.

போலீசார் நடத்திய சோதனையில், லட்சக் கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஷாம், தொழில் அதிபர்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விசாரணையில் ஷாம் தன் வீட்டை சூதாட்டம் நடத்தும் கிளப் போன்று பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.