தமிழகம் சினிமா

மீண்டும் வெளியான நடிகை எமிஜாக்சன் கர்ப்பமான புகைப்படம்; அதிர்ச்சியான ரசிகர்கள் ஏன் தெரியுமா?

Summary:

actress yemi jacsen - pragnent photos release

ஆங்கிலம் கலந்த தமிழில் மதராச பட்டினம் என்ற ஒரே படத்தில் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இயக்குனர் AL விஜய் இவரை தேடி பிடித்து மதராசபட்டினம் படத்தில் நடிக்க வைத்தார். முதல் படமே இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது.

அதன் பயனாக தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களின் படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பானதமானார் எமி ஜாக்சன். கடைசியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2 . 0 படத்தில் ரோபோ வேடத்தில் நடித்து அசத்தினார்.

இந்நிலையில் நீண்ட காலமாக எமி காதலித்து வந்த அவரது காதலருக்கு, எமிக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் திருமணம் நடைபெறாத நிலையில் சமீபத்தில் எமி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் உங்கள் உடல் நலத்தையும், குழந்தையின் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள் என அவரது ரசிகர்கள் அறிவுரைகள் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement