அட.. நம்ம கண்ணம்மாவா இது! வித்தியாசமான புது கெட்டப்பில் கலக்குறாரே! மெர்சலாக்கும் புகைப்படங்கள்!!

அட.. நம்ம கண்ணம்மாவா இது! வித்தியாசமான புது கெட்டப்பில் கலக்குறாரே! மெர்சலாக்கும் புகைப்படங்கள்!!


actress-vinusha-devi-photoshoot-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் ஹீரோயின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் முதலில் ரோஷினி ஹரிப்ரியன் என்பவர் நடித்து வந்தார். சில காரணங்களால் அவர் தொடரை விட்டு விலகிய நிலையில் கண்ணமா ரோலில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.

இவர் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ரோஷினியை போலவே இருக்கும் இவரை கண்ணம்மாவாக ரசிகர்கள் எளிதில் ஏற்றுக் கொண்டனர். இவர் திறமைக்கு முன்பு நிறம் ஒரு விஷயமே இல்லை என்பதை உணர்த்தி தற்போது சின்னத்திரையையே கண்ணம்மாவாக கலக்கி வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது வெலள்ளை நிறஉடையில் வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  அதனை கண்ட ரசிகர்கள் என்னம்மா இது புது கெட்டப்பு.. சூப்பரா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்