புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிரபல இயக்குனரின் மகளையே அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்தனரா.! அதிர்ச்சித் தகவல்.!
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியரின் மகளாவார். இவர் மேலும், அஞ்சாதே, வனயுத்தம், சென்னை-28 2ம் பாகம், கசடதபற போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் திடீரென தன் நீண்ட நாள் காதலரைக் கரம் பிடித்த விஜயலட்சுமி, தொடந்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு, சன்டிவியின் நாயகி சீரியலில் டைட்டில் ரோலில் நடித்தார். தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2ல் முக்கிய போட்டியாளராக இறுதி வரை இருந்து மூன்றாம் இடம் பிடித்தார்.
பின்னர், ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டைட்டிலையும் 1கோடி பரிசுத்தொகையும் வென்றார். சமீபகாலமாக வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வரும் இவர், செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "ஒரு பெண் திரைத்துறைக்கு வந்துவிட்டாலே, அவள் படுக்கைக்கு வரவேண்டும். அவர்கள் சொல்லும் அனைத்தையும் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
இதுபோன்ற அனுபவம் எனக்கும் ஒருமுறை நடந்தது. ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். சினிமாவில் நடிப்பது என் விருப்பம். அதை அப்பாவிடம் கூறிவிட்டு நடிக்க வந்தேன்" என்று கூறினார்.