இந்தியா சினிமா

பிரபல நடிகை வேதிகாவிற்கு விமானத்தில் நேர்ந்த கசப்பான அனுபவம்! விமான நிறுவனத்தின் மீது பாய்ச்சல்

Summary:

Actress vedhika upset about airindia

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார் நடிகை வேதிகா. இவரது நடிப்பில் சமீபத்தில் The Body என்ற ஹிந்தி படம் வெளியானது. 

இவர் முதல்முதலில் தமிழில் மதராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 போன்ற பிரபலமான படங்களிலும் நடித்துள்ளார். 

சமீபத்தில் விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார் நடிகை வேதிகா. தனது பயணத்தை முடித்துவிட்டு இன்று ஏர்இந்தியா நிறுவனத்தின் விமானத்தின் மூலம் வீடு திரும்பியுள்ளார். 

அவர் சென்ற விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளது. மேலும் இறங்கியபின் அவர் கொண்டு வந்த பை ஒன்று காணவில்லை.

இதுகுறித்து அவர் விமான ஊழியர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் 4 பைகள் கொண்டு வரவில்லை 3 மட்டுமே கொண்டு வந்தீர் என பதிலளித்துள்ளனர். இதனால் மிகவும் மன சங்கடத்திற்கு ஆளான வேதிகா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement