சணலை உடையாக அணிந்து அனல்பறக்கும் போஸ் கொடுத்த வேதிகா.. வைரலாகும் புகைப்படம்Actress Vedhika latest instagram photo looks viral

சணல் போன்ற உடை  அணிந்து நடிகை வேதிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

முனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார் அம்மணி. ஆனால் முனி படத்தை அடுத்து இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

Vedhika

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்த இவர் சமீபத்தில் காஞ்சனா 3 படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது பட வாயுக்களை தேடி வரும் அம்மணி அதற்காக சமூக வலைத்தளங்களில் சற்று கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற இவர், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புது புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.

பார்ப்பதற்கு சணல் போன்ற உடையில் இருக்கும் அவரின் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Vedhika

Vedhika