தெய்வமகள் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு! மாப்பிள்ளை இவர்தானா? இணையத்தைக் கலக்கும் கியூட் புகைப்படங்கள்!

தெய்வமகள் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு! மாப்பிள்ளை இவர்தானா? இணையத்தைக் கலக்கும் கியூட் புகைப்படங்கள்!


actress-usha-rai-marriage-photo-viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தெய்வமகள் தொடரில் முக்கிய கதாபாத்திரமான சத்யாவிற்கு தங்கச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் உஷா ராய். அதனை தொடர்ந்து அவர் சக்தி மற்றும் அழகிய தமிழ் மகள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் சின்னத்திரை இயக்குனர் மற்றும் நடிகரான பிரகாஷ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் செப்டம்பர் மாதம் எளிமையாக நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொரோனா பிரச்சினை முடிந்ததும் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தலாம் என அவரது குடும்பத்தினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Usharai

ஆனால் கொரோனா முடிவுக்கு வராத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உஷா ராய் மற்றும் பிரகாஷ் இருவருக்கும் மிகவும் எளிமையாக வீட்டிலேயே திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

UsharaiUsharai